ஓகி புயல் பாதிப்பு.. நிவாரணம் கோரி கன்னியாகுமரியில் விவசாய சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு.. பதற்றம்!

 

15-1513307926-strike467

ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய சங்கள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை கடலில் இருந்தபடியே நெருங்கியது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளும் மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏராளமான ரப்பர் மரங்கள் வேறோடு சாய்ந்தன. புயலால் கொட்டித் தீர்த்த மழையால் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

 

15-1513307944-fishermen-protest-02

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரியும், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரியும் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.  இதில் விவசாய சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த முழுஅடைப்பு போராட்டத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. குமரியில் பதற்றம் இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். முன்னதாக குழித்துறை,திருவட்டாறு, பயணம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு முழுஅடைப்பு போராட்டம் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் எல்லைப்பகுதியான களியாக்காவிளையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமமடைந்துள்ளனர்.

Leave a Response