ஜம்மு – காஷ்மீரில் 4.7 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம்

201712091744548922_Earthquake-of-magnitude-47-hit-Jammu-amp-Kashmir-at-413_SECVPF

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 4.7 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் லே பகுதியின் அருகில் இன்று மாலை 4.13 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்  4.7 அலகாக பதிவானதாக புவியியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ர பிரயாக் பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் டெல்லி உள்பட பல மாநிலங்களில் உணரப்பட்டது.

இதேபோல், நேற்று முன்தினமும் ஜம்மு-காஷ்மீரின் தாங்க் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Response