ரோஹிங்கியா அகதிகளை நுழைய விடாதீர்கள்!: ராஜ்நாத் வலியுறுத்தல்

 ரோஹிங்கியா அகதிகளை நமது நாட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்து கண்காணிக்க வேண்டும் என வங்கதேச எல்லை மாநில முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.மியான்மரின் ரோஹிங்கியா மாகாணத்தில் வசித்து வரும் அகதிகள் அந்நாட்டு ராணுவத்தினரால் விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் வங்கதேச எல்லையில் முகாமிட்டு வருகின்றனர்.இவர்கள் இந்திய வங்கதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக புகார் எழுந்தது.
rajnath_singh_1_17124
ரோஹிங்கியா அகதிகள் விவகாரம் தொடர்பாக வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மாநில முதல்வர்களான மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்), சர்பானந்தா சோனோவால் (அசாம்) லால் தன்ஹாவாலா (மிசோரம்) மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆலோசனை கூட்டத்தின் போது ராஜ்நாத் பேசியது, இந்திய-வங்கதேச எல்லை பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினோம், சட்டவிரோதமாக அந்நியர் குடியேறுதல் எந்த சூழ்நிலையிலும் நடக்க அனுமதிக்க கூடாது. மேலும் ஆயுதங்கள் கடத்தல், மற்றும் ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி கண்காணிக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை என்றார்.

Leave a Response