கேரளாவுடன் இணைவோம்.. குமரி மக்களின் முழக்கம்.. அதிர்ச்சியில் தமிழக அரசு!

07-1512664931-fishermen-protest212

“எங்களை மதிக்காத தமிழக அரசு எங்களுக்கு வேண்டாம். நாங்கள் கேரளாவுடன் இணைவோம்” என்று கன்னியாகுமரி மாவட்ட மக்கள் முழங்கியுள்ளது தமிழக அரசை அதிர வைத்துள்ளது. கேரளாவில் உள்ள இடதுசாரி அரசு மிகத் தீவிரமாக ஓகி புயல் பாதிப்பு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் செயல்படும் விதம் ஒட்டுமொத்த இந்தியாவையும் கவர்ந்துள்ளது. மீனவர்களை மீட்பதில் வேகம், கட்டுப்பாட்டு அறையில் போய் அமர்ந்து பணிகளை முடுக்கி விடுவது என பிரமாதப்படுத்தி வருகிறார் பினாராயி விஜயன். ஆனால் தமிழகத்தில் நிலைமை படு மோசமாக இருக்கிறது. தலைகீழாக உள்ளது. இங்கு முதல்வர் இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரவில்லை.

07-1512664955-fishermen-protest21814

இது அந்த மாவட்ட மக்களை கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது. குழித்துறையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. முதல்வர், அமைச்சர்கள் வரும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் அறிவித்து விட்டனர். ஜல்லிக்கட்டை விட உயர்ந்தது ஏழை எளிய மக்களின், மீனவ சமுதாயத்தினரின் இந்த எழுச்சி மிக்க போராட்டம் தமிழகத்தை அதிர வைத்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட இது மிகவும் உயர்ந்தது என்பதில் சந்தேகமே இல்லை. காரணம் இது மக்கள் தங்களுக்காக நடத்தி வரும் போராட்டம். தமிழக அரசுக்கு மிகப் பெரிய அவமானம் அதை விட இந்தப் போராட்டத்தின் முக்கிய அதிர்ச்சி முழக்கமாக, நாங்கள் கேரளாவுடன் இணைவோம் என்று மீனவ மக்கள் கூறியுள்ளதுதான். இது தமிழக அரசுக்கு மிகப் பெரிய அவமானமாகும். தமிழக அரசு முற்றிலும் செயலிழந்து போயுள்ளது என்பதையே இது காட்டுவதாக உள்ளது.

x07-1512635200-fishermen-protest3445.jpg.pagespeed.ic.QxxicrZJTB

கேரளா மீனவர்களை மீட்கவும், நிவாரணப் பணிகளிலும் கேரள அரசு மிகப் பெரிய அளவில் அக்கறை காட்டுகிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குமரி மாவட்ட மீனவர்கள் குமுறியுள்ளனர். அடுத்த கட்டமாக குமரி மாவட்ட மீனவ கிராமங்களை கேரளாவுடன் இணைக்கக் கோரி நாங்கள் போராட்டத்தில் ஈடுபடப் போகிறோம் என்று அவர்கள் முழங்கியுள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது. தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொள்ளாவிட்டால் மிகப் பெரிய மக்கள் புரட்சியை அது குமரியையும் தாண்டி எதிர்கொள்ள நேரிடலாம் என்பதே நிதர்சனம்.

Leave a Response