சூர்யாவுடன் இணையும் சிம்ரன், பார்த்திபன்!!

தமிழ்திரை  உலகில் ஆங்கில படங்களுக்கு இணையாக இயக்க  கூடியவர் கௌதம் வாசுதேவ மேனன். இவருடைய படங்களில் வரும் இவரது தனிப்பட்ட பாணி இளைஞர்களிடையே  பெரும் வரவேற்பு பெற்றது.

சூர்யாவுடன் இணைந்து இவர் பணியாற்றிய காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களை தொடர்ந்து தன்னுடைய போட்டன் கதாஸ் என்ற பட நிறுவனத்தின் மூலம் தயாராகும்’ துருவ நட்சத்திரம்’ படம் மூலம் மீண்டும் இணைகிறார். பூஜையுடன் துவங்கிய ‘துருவ நட்சத்திரம்’ பெரும் எதிர்பார்ப்புடன் துவங்கப்பட்டு, சூர்யா சம்பத்தப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டது.

தன்னுடைய இடைவிடாத தவத்தின் மூலம் நட்சத்திரங்கள்  இடையே,  திசை காட்டும் முக்கிய நட்சத்திரமாக ஒளிர் விடும் நட்சத்திரம் தான் ‘துருவ நட்சத்திரம்’.

இந்த தலைப்பு  பெயருக்காக வைத்தது இல்லை, கதையின் சாராம்சத்தை ஒட்டியே  தீர்மானிக்கபட்டது.

சூர்யாவுடன் பார்த்திபன், சிம்ரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். மற்ற நடிக, நடிகையர், தொழில்நுட்ப  கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு குறித்த செய்திகள் விரைவில் வெளியிடப்படும்.