அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார் ராகுல் காந்தி!

 xrahul098-05-1512472397.jpg.pagespeed.ic.QnY9jN0EIu (1)

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 89 பேர் மனுத்தாக்கல் செய்தனர். ராகுலைத் தவிர வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யாததால் அவர் ஒருமனதாக தலைவரானார்.

காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 19 ஆண்டுகாலம் சோனியா காந்தி இருந்து வருகிறார். அவரது உடல்நிலையில் பாதிப்பு உள்ளதால் ராகுல் காந்தியை தலைவராக்கும் முயற்சிகள் நடைபெற்ரன.

ராகுல் காந்தியைப் பொறுத்தவரையில் தலைவராக தம்மை நியமிப்பதை அவர் விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமைகள் ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும்; தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தேர்வாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து முறைப்படி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத் தேர்தலில் ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்தார்.

மேலும் பல மாநிலங்களைச் சேர்ந்த 89 பேரும் ராகுல் காந்திக்காக மனுத்தாக்கல் செய்தார். ஆனால் ராகுலை எதிர்த்து எவரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து ஒருமனதாக ராகுல் காந்தி போட்டியே இல்லாமல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Response