இரட்டை நாயகனாக, விஜய் ஆண்டனியின் “அண்ணாதுரை” – விமர்சனம்!

Vijay_Antony

நடிகை ராதிகாவின் R ஸ்டுடியோஸ் மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரித்து, நேற்று வெளியாகியுள்ள படம் தான் “அண்ணாதுரை”. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜி.ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி அண்ணாதுரை, தம்பிதுரை என்ற இரட்டையர்கள் பாத்திரத்தில் இரு வேடங்களில் நடித்துள்ளார். டயானா சம்பிக்கா, மகிமா கதானாயகிகலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜ்வெல் மேரி, ராதாரவி, காலி வெங்கட், நளினிகாந், ரிந்து ரவி, சரண்ராஜ், உதயராஜ், டேவிட், பத்திரிகையாளர் சு.செந்தில்குமரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தில் அண்ணாதுரை, தம்பிதுரை என இரட்டையர்களாக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. எளிமையான குடும்பம்…அப்பா துணிக்கடை நடத்தி வருகிறார். அண்ணன் விஜய் ஆண்டனி தன்னுடைய காதலி இருந்துவிட பித்து பிடித்தது போல வேலையில்லாமல் குடியே கெதி என இருப்பார்.

 

org_03821201711151036தம்பி கதாபாத்திரத்தில் வரும் தம்பிதுரை விஜய் ஆண்டனி, பள்ளிக்கூடத்தில் பி.டி. ஆசிரியராக கதாபாத்திரமேற்றுள்ளலார். இவருக்கு ஜோடியாக டயானா ரேவதி என்ற கதாபாத்ரியாத்தில் நடித்துள்ளார்.

அண்ணாதுரையின் அறிமுக காட்சியே, காம வக்ர புத்தி கொண்ட கயவர்கள் இடத்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு இளம் பெண்ணை காப்பாற்றுவது. ஆரம்பமே சண்டை காட்சி தான். விஜய் ஆண்டனியின் அப்பாவாக நடிக்கும் நலிநிகாந்த் வியாபாரிகள் நல சங்க தலைவர்.

அண்ணாதுரை நண்பராக வரும் காலி வெங்கட், தான் தொழில் செய்வதற்கு பணம் தேவை என அண்ணாதுரையிடம் சொல்ல, அவரோ பைனான்சராக வரும் சேரன்ராஜிடம் ஜாமீன் நின்றும் பணம் வாங்கி தருகிறார். ஒரு கட்டத்தில் காலி வெங்கட்டால் பணத்தை சொன்ன நேரத்தில் திருப்பி தர இயலாத காரணத்தினால், அண்ணாதுரை ஒரு சின்ன திதில்லாலங்கிடி வேலை செய்து காலி வெங்கட்டுக்கு பண உதவி செய்கிறார். அந்த பண உதவி ச்வேய்யும் நேரம் அண்ணாதுரையின் ஒட்டு முத்த குடும்ப வாழ்க்கையில் ஒரு தொல்லைகள் நேர, குடும்பமே ஆட்டம் காண்கிறது.

annadhurai

அண்ணாதுரை சிறைக்கு செல்ல, தம்பிதுரைக்கு இன்னல்கள் ஏற்பட அதை எப்படி சமாளிக்கிறார் தம்பிதுரை, சிறை சென்ற அண்ணாதுரை என்ன ஆகிறார், குடும்பம் ஒன்று சேர்கிறதா, வில்லன்கள் ஆட்டம் என்ன என்பது தான் படத்தின் மீதமுள்ள கதை.

தம்பிதுரையின் மாமன் மகளாக வரும் மகிமாவுடன் நடக்கும் காதல் சற்று செயற்கையாக இருப்பதை போல் தோன்றினாலும் காதல் காட்சிகளில் நடித்துள்ள தம்பிதுரையும் ஈஸ்வரியாக நடித்துள்ள மகிமாவுக்கும் நல்ல ஒரு கெமிஸ்ட்ரி வர்க்கவுட் ஆகியுள்ளது. அண்ணாதுரையை காதலிக்க முயற்சிக்கும் ரேவதியுடன் காதல் காட்சிகள் சற்று குறைவுதான். காதல் என்ற பெயரில் காமத்தை திணிக்காமல் காட்சிகளை அமைத்த இயக்குனர் ஸ்ரீநிவாசன் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனியை பாராட்டனும். படத்தில் எங்கும் அருவெருக்கத்தக்க காட்சிகள் என்பது இல்லை. தம்பிதுரை காதலி ஈஸ்வரியின் தந்தையாக நடித்துள்ள பத்திரிகையாளர் செந்தில்குமரனின் நடிப்பு மிக எதார்த்தமாக இருக்கிறது. எப்போதும் போலீசாக நடிக்கும் சரண்ராஜ் இந்த படத்தில் ஒரு பைனான்சர் கதாபாத்திரத்தில் ஒரு வித்யாசமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். அண்ணாதுரை, தம்பிதுரையின் தந்தையாக நடித்துள்ள நளினிகாந்த் தன்னுடைய கதாபாத்திரத்தை சீர்பட செய்துள்ளார்.

annadhurai1

வீண் அலப்பறைகள் ஏதும் இல்லாத ஒளிப்பதிவால், படத்திற்கு ப்ளஸ் மார்க் சேர்த்திருக்கிறார் தில்ராஜ். `ஈ.எம்.ஐ’ பாடலில் வரும் விஷுவல் எஃபெக்ட்ஸும் கான்செப்டும் செம. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் ஓ.கே தான். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இந்த படத்தின் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் மட்டுமல்ல, படத்தொகுப்பாளரும் கூட. பிசிறில்லாமல் தொகுத்திருக்கிறார். படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகள் சற்று செயற்கையாகவே தெரிகிறது.

“அண்ணாதுரை” திரைப்படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்க ஒரு உத்திரவாதம் தான் இந்த விமர்சனம்.

 

Leave a Response