நட்பை புதுபிக்கப்போகும் சிம்பு – தனுஷ்!

smibu

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் சக்க போடு போடு ராஜா படத்தின் இசையை தனுஷ் வெளியிட உள்ளார். சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. சிம்பு – தனுஷ் இணைந்து படத்தின் இசையை வரும் 6-ம் தேதி வெளியிட உள்ளனர். திரையுலகம் இருவரையும் பரம எதிரியாக விமர்சித்து வந்த நிலையில் இருவர்களின் நட்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இசை வெளியீடு தொடர்பான அறிவிப்பு வீடியோ ஒன்றை சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜி.எல்.சேதுராமன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சந்தானத்துடன், வைபவி சாண்டில்யா, விடிவி கணேஷ், விவேக் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Leave a Response