‘குற்றப்பரம்பரை’ என்ற வார்த்தை சர்ச்சை நீக்கப்படும் – தீரன் அதிகாரம் ஒன்று படக்குழு !

 

karthi-759_18472

 

கார்த்தி , ரகுல் ப்ரீத் சிங் , போஸ் வெங்கட் நடித்து ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று நல்ல விமர்சங்களையும் பெற்றுவரும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’.

 

பிரிட்டிஷ்காரர்களால் வரையறுக்கபட்ட குற்றப்பரம்பரைகள், அவர்களின் இன்றைய வழித்தோன்றல்கள், ஓநாய் வழிபாடும், வேட்டை முறையும், செய்வது குற்றம் என்றே தெரியாமல் அத்தனை மூர்க்கமாகக் கொலைகளை நிகழ்த்தும் கூட்டம், அதற்கான பின்னணி என  நிஜ சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் கதைகளை ஆரய்ச்சி செய்து அதைப் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் வினோத்.

 

இந்தியா முழுக்கவே தொடர்ச்சியாக ஆதிவாசிகளும் பூர்வகுடிகளும் காட்டுமிராண்டிகள் கொள்ளையர்கள் என்கிற முத்திரை குத்தப்பட்டுத்தான் தங்கள் வாழ்விடங்களிலிருந்து அரசுகளாலும் கார்ப்பரேட்களாலும் விரட்டப்படுகிறார்கள். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக ‘குற்றப்பரம்பரை’ சட்டத்தால் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்டு, சுதந்திரத்திற்குப் பிறகு Habitual Offenders Act, 1952 மூலமாக இந்திய அரசாலும் தொடர்ந்து வேட்டையாடப்பட்ட ஒரு தலித் சமூகத்தை மோசமான காட்டுமிராண்டிகளாக சித்திரித்து இருப்பதை தவிர்த்திருக்கலாம்.! என பல சமூக வலைதளங்கள் , பல பத்திரிக்கை விம₹சனங்களில் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

IMG_7169

எனவே தற்போது அது சார்பாக படக்குழு பத்திரிக்கை செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது,

 

“எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் ‘தீரன் அதிகாரன் ஒன்று’ படத்தில் தவறாக சித்தரிக்கவில்லை. எந்தவொரு சமுதாயமும், கொலை கொள்ளையை குலத்தொழிலாக கொண்டு வாழவில்லை. அப்படி ஒரு சித்தரிப்பு இந்தப்படத்தில் காட்டப்படவில்லை. இருப்பினும் மக்கள் மனம் புண்படும்படி இருப்பதாகக் கருதுவதால் அதற்காக படக்குழு சார்பாக மன்னிப்பு கேட்டு கொள்வதோடு வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்து கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள்.
அதுமட்டுமின்றி “இனிவரும் தொலைக்காட்சி, இனையதள ஒளிபரப்புகளிலும் ‘குற்றப்பரம்பரை’ என்ற சொல் மற்றும் புத்தக காட்சி நீக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8780eab3-5127-444c-983c-b8bb90d029a3

 

 

Leave a Response