திங்கள் கிழமை முதல் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் வடகிழக்கு பருவமழை

rain 2jpg

 அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் திங்கட்கிழமை முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தொடர்ந்து விடாமல் பலத்த மழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பியது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுமார் 10 நாட்கள் மக்கள் மழையால் சிரமப்பட்டனர். இருந்தாலும் மழை பெய்தது நீர் நிலைகள் நிரம்புவதற்கு உதவியாய் அமைந்தது. இந்நிலையில் தற்போது அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்து அந்த பகுதி முழுவதும் பரவி மேலடுக்கு சுழற்சியாக நீடிக்கிறது. இது மேற்கு மற்றும் தென்மேற்கு திசை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. வரும் 26ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் அதாவது தமிழக கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள் பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
32591
இதனால் 26ஆம் தேதிக்கு பின் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்தர் கூறியதாவது:-
காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து நாளை பிறகே தெளிவாக தெரியவரும். அதன் நகர்வு குறித்து கண்காணிட்து வருகிறோம். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் பலத்த மழை பெய்யும்.

வார இறுதியில் பருவ மழை தீவிரமடையும். தமிழகத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 32.1 செ.மீ. ஆனால் தற்போது வரை அதற்கு பதிலாக 26.4 செ.மீ அளவிலான மழை பெய்துள்ளது என்றார்.

Leave a Response