என் மகளிடம் நிர்வாகம் நிதானம் காட்டவில்லை: தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தந்தை உருக்கம்!

23-1511425004-jappier-sathyabama-university35-15

என் மகள் தவறே செய்திருந்தாலும் கல்லூரி நிர்வாகம் என் மகளிடம் நிதானம் காட்டத் தவறியதால், எனது மகள் இளவயது வேகத்தில் தற்கொலை செய்துள்ளார் என தந்தை உருக்கத்துடன் கூறினார்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர், ராஜரெட்டி(50). அவரது மகள், ராக மவுனிகா(19) சென்னை, சோழிங்கநல்லூரில் தனியார் பொறியியல் கல்லூரியில், பி.இ, முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் மவுனிகா தங்கி இருந்தார்.

 

நேற்று, கல்லூரியில் மாதாந்திர தேர்வு நடந்தது. அப்போது, மவுனிகா காப்பி அடித்து எழுதியதாகவும் இதனால், தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பேராசியர், மவுனிகாவை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. மவுனிகாவை சற்று அதிகமாகவே அனைவர் முன்னிலையில் அவமானப்படுத்தும் விதமாக பிற ஆசிரியர்களும் கண்டித்துள்ளனர், இதையடுத்து, உடனடியாக தேர்வு அறையிலிருந்து வெளியேறிய மவுனிகா, விடுதி அறைக்குச் சென்றுள்ளார்.

 

பின்னர் தனது சகோதரனுக்கு தற்கொலை செய்துகொள்வதாக எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

23-1511425264-sathyabamauniversity-studentsuicide

இந்த சம்பவம், கல்லூரி மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள் கல்லூரிக்கு தீவைத்து சூறையாடினர். இதனால் கல்லூரிக்கு ஒரு மாதம் விடுமுறை விடப்பட்டது. செம்மஞ்சேரி போலீஸார் மாணவியின் உடலை பிரேதபரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

 

ராயப்பேட்டை மருத்துவமனையில் மாணவியின் தந்தை ராஜாரெட்டி உடலைப் பெற வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் உருக்கமாக கூறியதாவது:

23-1511425255-sathyabamauniversity-studentsuicide2

“என் மகள் தற்கொலை பற்றி கல்லூரி நிர்வாகம் எங்களுக்குத் தகவல் சொல்லவில்லை, எனது மகள் ஹால் டிக்கெட்டை கல்லூரி நிர்வாகத்தினர் கிழித்து எறிந்தனர். கல்லூரியின் தவறான நடவடிக்கையால் எனது மகளை இழந்துவிட்டேன். இனிமேலாவது கல்லூரி மாணவர்களை துன்புறுத்தாதீர்கள். என் மகள் தவறு செய்திருந்தால் என்னிடம் தெரிவித்திருக்கலாம். அவளுக்கு இளவயது அவள் தவறு செய்திருந்தால் அவர்களே கவுன்சிலிங் கொடுத்திருக்கலாம். ஒவ்வொருவரும் தவறு செய்துள்ளனர்.

இளவயது சிந்தனையின் வேகத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்கும் வயது. இன்று என் மகளை இழந்துவிட்டேன், கல்லூரி நிர்வாகத்தின்மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ராஜாரெட்டி உருக்கமாகக் கூறினார்.

Leave a Response