இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது.

 
 1c42500d-40a3-4d34-886a-fed7db69b4f3

இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 172 ரன்கள், இலங்கை அணி 294 ரன்கள் எடுத்தது.

கோலி சதம் :

முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி, திருமன்னே 51, மேத்தீவ்ஸ் 52, மற்றும் ஹெரத் 67 ரன்கள் அடிக்க 294 எடுத்தது.

தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 79, தவான் 94, கோலி அபார சதம் (104*) அடிக்க இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.

231 ரன்கள் இலக்கு:
இரண்டாவது இன்னிங்சில், கேப்டன் கோலி, தனது 50வது சர்வதேச சதம் விளாசி அசத்த இந்திய அணி 8 விக்கெட்டுக்கு, 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து இலங்கை அணிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

6ddb62b2-73d6-4434-90ff-bc115a16d2d0

புவனேஷ்வர் மிரட்டல்:
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி, ஆரம்பம் முதலே இந்திய வேகத்தில் ஆட்டம் கண்டது. சமரவிக்ரமா (0) புவனேஷ்வர் வேகத்தில் போல்டானார். ஷமி தன்பங்கிறகு கருணரத்னேவை (1) வெளியேற்றினார். திரிமன்னேவை (7) புவனேஷ்வர் அவுட்டாக்க, அனுபவ மாத்யூஸை (12) உமேஷ் கவனித்து அனுப்பினார்.

டிக்வெலா அதிரடி:
தொடர்ந்து சரிவை கண்ட இலங்கை அணிக்கு டிக்வெலா, அதிரடியாக ரன்கள் சேர்த்தார். டிக்வெலா (27), சண்டிமால் (20) என அடுத்ததடுத்து வெளியேற இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

வெளிச்சமின்மை:
இந்நிலையில் இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி ‘டிரா’ ஆனதாக அறிவிக்கப்பட்டது.

8a1b9a4c-daef-4cca-a7c0-1597bec18f78

மிரட்டல் டிரா:
முதல் டெஸ்டின் முதல் இரண்டு நாட்கள் ஆட்டம் மழையால் பாதிக்க, எஞ்சியுள்ள மூன்று நாட்களில் கோலி சதம், ‘திரில்’ இலக்கு என ரசிகர்களுக்கு இப்போட்டியில் அதிக சுவாரஸ்யம் வழங்க இந்திய வீரர்கள் தவற வில்லை. மறுபுறம் இலங்கை அணி வீரர்களும் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் அடுத்த இரண்டு டெஸ்டிலும் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதில் சந்தேகம் இல்லை. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 24-28 வரை நாக்பூரில் நடக்கிறது.

Leave a Response