ஹரீஷ் கல்யாண், ரெய்சாவின் ‘பியார் பிரேமா காதல்’

bd5d747f-03ea-4cc4-9420-d92a351d48b4

பாகுபலி 2 படத்தை வெளியிட்ட கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இணைந்து தயாரிக்கும் படம், ‘பியார் பிரேமா காதல்’. ஹரீஷ் கல்யாண், ரெய்சா ஜோடி. ஒளிப்பதிவு, ராஜா பட்டாச்சார்யா. இசை, யுவன்சங்கர்ராஜா. இயக்கம், இளன். இவர், கிருஷ்ணா நடிப்பில் ரிலீசாக இருக்கும் ‘கிரகணம்’ என்ற படத்தை இயக்கியவர். ‘இது முழுநீள காதல் கதையாக இருந்ததால், இந்த தலைப்பைச் சூட்டினோம். சென்னையில் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. பாடல்கள் மலேசியாவில் படமாக்கப்படுகின்றன’ என்றார் இயக்குனர்.

Leave a Response