இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் பிறந்தநாள்- தலைவர்கள் நினைவிடத்தில் அஞ்சலி!

Indira-Gandhi

1917ம் ஆண்டு நவம்பர் 19-ல் அலகாபாத்தில் பிறந்தார் இந்திராகாந்தி. மிகவும் தைரியமான குணம் கொண்ட இவர், இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும், இந்தியாவின் பிரதமராகவும் பணியாற்றி உள்ளார். இவரது ஆட்சிக்காலத்தில் தான் 1975-ல் எமர்ஜென்ஸி கொண்டுவரப்பட்டது.

இன்று அவரது நூறாவது பிறந்தநாள் விழாவையொட்டி முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு தலைவர்கள் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

ganthi

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் இந்திரா காந்தி பிறந்த நாள் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், ‘உங்களுடைய பிறந்தநாளில் உங்களுடனான நினைவுகளை மகிழ்ச்சியோடு நினைத்துப்பார்க்கிறேன். எங்களின் பலம் நீங்கள் தான். எங்களுக்கு வழிகாட்டியும் நீங்கள் தான்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

அதுபோல பிரதமர் நரேந்திரமோடியும் இந்திராகாந்தி பிறந்த நாளையொட்டி ட்விட்டரில் செய்தி வெளியிட்டு உள்ளார். அதில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு என் அஞ்சலிகள் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response