இடுகாட்டில் ஒரு பெண் ஊழியரா? என்ன சொல்லப்போகுது இந்த ‘ஆறடி’??

newmovei

ஒவ்வொரு மனிதர்கள் வாழ்க்கையிலும் வாழ்வு என்றால் பிறந்தவுடன் தொட்டில் என்று தான் சொல்லுவர். அதை போல் ஒருவருடைய மரணம் என்றால் ஆறடி குழி என்று தான் வழக்கத்தில் அனைவரும் பேசுவர். இந்த ஆறடி குழியை பற்றிய படம் தான் இந்த “ஆறடி” என்று தலைப்பிடப்பட தமிழ் படம். இப்படத்தில் விஜய்ராஜ், தீபிகாரங்கராஜ், ஜீவிதா, சாப்ளின் பாலு, பெஞ்சமின் என்று பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சக்திவேல் என்பவர் கதை, திரைகதை, வசனம் எழுத, சந்தோஷ்குமார் என்ற ஒரு புதுமுக இயக்குனர் படத்தொகுப்பினை செய்து இப்படத்தினை இயக்கியுள்ளார்.

இயக்குனர் சந்தோஷ்குமார் பல குறும்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பாடல்களை அரூர் தமிழ்நாடான், கண்ணன் பார்த்திபன், அபிஜோஜோ மற்றும் கோமாள்தாசன் எழுதியுள்ளனர். பாடல்களை திப்பு, மால்குடி சுபா மற்றும் அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் பாடியுள்ளனர். அபிஜோஜோ இசையமைக்க, சந்தோஷ்குமார் இயக்க, ஆர்.கே.விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சில தினனகளுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய கதைய்டாசிரியர் சக்திவேல் மற்றும் இயக்குனர் சந்தோஷ்குமார் கூறியதாவது, இப்படம் தமிழில் மாறுபட்ட ஒரு படமாக இருக்கும் என்றார். அது என்ன மாருப்பத்ட் படம் என்று அவர் குறிப்பிட்டதாவது, இதில் நடித்துள்ள கதாநாயகி இப்படத்தில் ஒரு வெட்டியால்(இடுகாடில், சுடுகாடில் ஒரு பெண் வெட்டியான்) பாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரவித்தார். கதாநாயகி தீபிக்காரன்கராஜ் அவருடைய பணியை இப்படத்தி சிறக்க செய்துள்ளார் என்றும், இப்படம் கண்டிப்பாக இந்திய படங்களில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இப்படம் முற்றியுள் முடிவடைந்து விரைவில் ரிலீசாகும் தருணத்தில் உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் தெரவித்தார்.

Leave a Response