ஹார்வார்டு பல்கலை- தமிழ் இருக்கைக்காக மிஸ்ஸோரி தமிழ்ச் சங்கம் நிதி வழங்கியது!!

harvard-university

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் முத்தமிழ் விழா மற்றும் உலகப் புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி திரட்டும் இசை விழா மிஸ்ஸோரி தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்றது. தமிழ் இருக்கை அமைய தேவையான ரூ39 கோடி ரூபாயில் ஹார்வார்டு தமிழ் இருக்கை ‘ழ’ என்ற அமைப்பு ரூ 19 கோடி ருபாய் அளித்துள்ளது.

 தமிழக அரசு ரூ 10 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. எஞ்சிய ரூ 10 கோடியை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் மற்றும் அமைப்புகள் வழங்கிவருகின்றனர்.
harvard
இதற்காக மிஸ்ஸோரி தமிழ்ச் சங்கம் சார்பில் செயின்ட் லூயிஸ் நகரில் முத்தமிழ் விழா மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முதலில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் தமிழ் நாடக மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து நிதி திரட்டும் இசை விழாவில் பாடகர்கள் சத்யன், செந்தில் தாஸ், என்.எஸ்.கே. ரம்யா மற்றும் அனிதா ஆகியோர் பாடினர். நிகழ்ச்சி முடிவில் திரட்டப்பட்ட 30,000 டாலர்கள் மிஸ்ஸோரி தமிழ் சங்கத்தால் ஹார்வார்டு பல்கலைகழக தமிழ் இருக்கைக்கு வழங்கப்பட்டது.
ஹார்வார்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கைக்காக நிகழ்ச்சிகள் மூலம் 30,000 டாலர்களை திரட்டி வழங்கியது மிஸ்ஸோரி தமிழ்ச் சங்கம்.

Leave a Response