கோபாலபுரத்தில் திமுக தலைவரை சந்தித்தார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர்!

sarath

நடிப்பு, சீரியல் தயாரிப்பு என பல பணிகளில் பிஸியாக இருந்தாலும், அவ்வப் போது அரசியல் களத்தில் நாங்களும் இருக்கிறோம் என தெரிவித்து வருகின்றனர் நடிகை ராதிகா மற்றும் சரத்குமார்.

இந்நிலையில் இன்று, நடிகர் சரத்குமார் தன்னுடைய மனைவியுடன் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இந்த திடீர் சந்திப்பு குறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, மரியாதை நிமித்தமாக நடைபெற்ற சந்திப்பு எனவும், அரசியல் ரீதியாக நடைபெற வில்லை எனவும் கூறப்படுகிறது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இவர்கள் திமுக தலைவரை சந்தித்துள்ளது, பலருக்கும் அதிமுகவில் இருந்து சரத் குமார் திமுகவில் இணைய பாதை போடுகிறார் என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத பல மாற்றங்கள் நடைபெற்று வரும் தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

sarathkumaarதற்போதைய அரசியல் சூழ்நிலையில் இவர்கள் திமுக தலைவரை சந்தித்துள்ளது, பலருக்கும் அதிமுகவில் இருந்து சரத் குமார் திமுகவில் இணைய பாதை போடுகிறார் என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத பல மாற்றங்கள் நடைபெற்று வரும் தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response