பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‘வர்மா’

87da769ffdcc3b57d6b7149a35a85626

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்து சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம், ‘அர்ஜூன் ரெட்டி.’ தமிழகத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ட்ரெண்டையே உருவாக்கியது.

முரட்டு தேவதாஸாக விஜய் தேவரகொண்டா பின்னியெடுத்திருப்பார். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்பதும், அதை பாலா இயக்கப்போகிறார் என்பதும் ஏற்கெனவே வெளியான தகவல்தான்.

தற்போது இந்தப் படத்திற்கு, ‘வர்மா’ எனப் பெயர் வைத்துள்ளனர். அதை, விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை நேற்றே வெளியிடுவதாக இருந்த விக்ரம், ஒளிப்பதிவாளர் பிரியன் காலமானதால், அதை ஒத்திவைத்து, இன்று வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response