சென்னையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை நாளை (நவ.,11) தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் வருமான வரித்துறையை சேர்ந்த 1,800க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த சோதனையில் முதல் நாளில் 40 இடங்களில் சோதனை நடந்து முடிந்தது. முடிவில் ஜெயா டிவி நிறுவனத்தில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (நவ.,10 )சோதனை நடைபெற்றது. இந்த சோதனை நாளை (நவ.,11) 40 முதல் 50 இடங்கள் வரையில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனை முடியும் வரையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படாது எனவும் அதிகாரிகள் கூறினர்.