எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: ராமநாதபுர மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற அதிரடி உத்தரவு!

mad
ராமநாதபுரம் மாவட்டம், பாரதி நகர் பூங்காவில் வரும் 25ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இந்நிலையில் பூங்காவில் மேடை அமைக்கும் போது விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் மாற்றப்படுவதாக ராஜூ என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கும் இடத்தை மாற்றுவது குறித்து 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Response