ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி.யாகிறாரா ரகுராம் ராஜன்?

55d4a42f7abf271d91f6be83070fee7c

ஆர்பிஐ முன்னாள் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனை மாநிலங்களவை எம்.பி.யாக்க ஆம் ஆத்மி கட்சி பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மிக சிறந்த பொருளாதார மேதையான ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தார். பணமதிப்பிழப்புக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் அவர் மீது பாஜகவினர் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் பொருளாதார மேதையான அவர் பதவிக் காலம் முடிவடைந்ததாலும் பதவி நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் புதிய ஆளுநராக உர்ஜித் பட்டேலை மத்திய அரசு நியமித்தது.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்கு ரகுராமின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. எனினும் அவர் அந்த விருதுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ள 3 பேரின் பதவிக்காலம் வரும் ஜனவரியில் முடிவடைகிறது. அப்போது ரகுராம் ராஜனையும் ராஜ்யசபா எம்.பி.யாக்க ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆம் ஆத்மியின் இந்த முடிவு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response