சென்னையில் மழைக்கு இன்று ரெஸ்ட்… சொல்கிறது வானிலை மையம்!

whethar
சென்னையில் நேற்று மாலையில் இருந்து கொடூரமாக பெய்து வரும் மழை இன்று தமிழ்நாடு வெதர் மேன் இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் விவரமாக எழுதியிருக்கும் அவர் இன்று மழை கண்டிப்பாக நிற்கும் என்று கூறியிருக்கிறார்.

சென்னையில் நேற்றில் இருந்து மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்யும் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. சென்னையின் 70 சதவிகிதமான இடங்களில் உயரமாக நீர் நிரம்பி இருக்கிறது. கடந்த 8 மணி நேரமாக சென்னையின் அனைத்து பகுதியிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சென்னையை ஒரே இரவில் அடியோடு புரட்டிப் போட்ட இந்த பேய் மழை இன்று காலையில் இருந்து படிப்படியாக குறையும் என தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்து இருக்கிறார். அது குறித்து அவர் தனது தமிழ்நாடு வெதர் மேன் பேஸ்புக் பக்கத்தில் விவரமாக எழுதி இருக்கிறார்.

அதில் ‘சென்னையில் மோசமாக பெய்த மழை கடைசியாக முடிவுக்கு வந்துவிட்டது. ராடார் விவரங்களின் படி சென்னையை சூழ்ந்து இருந்த அபாயம் இப்போதைக்கு விலகி இருக்கிறது. சென்னையை சூழ்ந்து இருந்த மேகங்கள் எல்லாம் தூரமாக நகர்ந்து இருக்கிறது. லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இனி அச்சப்பட தேவை இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Leave a Response