தமிழக அரசு மீதான வழக்கு- தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

chennai

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உட்பட 5 வழக்குகளை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி நீதிபதி ரவிச்சந்திர பாபு பரிந்துரை செய்துள்ளார்.தலைமை நீதிபதி முடிவு.

அப்போது அவர் கூறுகையில்:-

சபாநாயகர் அதிகாரம் அரசியலமைப்பு அதிகாரத்திற்கு சார்ந்த விஷயம் என்பதால் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்படுகிறது. வழக்குகளை கூடுதல் அமர்வு விசாரித்தால் நன்றாக இருக்கும் கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரிக்குமா என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் எனக்கூறினார்.

5 வழக்குகள்:-

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு,

tn_government

குட்கா விவகாரத்தில் சட்டசபை உரிமை குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு,

ஓபிஎஸ், மாபா உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் பதவியை பறிக்க வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு,

பெரும்பான்மையை நிருபிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு,

முதல்வருக்கு எதிராக ஓட்டளித்த ஓபிஎஸ், மாபா பதவியை பறிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் ஆகியவை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி நீதிபதி ரவிச்சந்திர பாபு பரிந்துரை செய்துள்ளார்.

Leave a Response