மின்சாரம் தாக்கி சிறுமிகள் உயிரிழந்த விவகாரம்: அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு!

23304871-6333-411c-9e2b-1edd5d8050ce
சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் இன்று காலை குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன. மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாத இரு சிறுமிகள் அந்த கம்பியை தெரியாமல் மிதித்தனர். மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் அவர்கள் இருவரும் தூக்கி எறியப்பட்டனர்.

 

இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமிகளை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இரு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். மின்சார கம்பி அறுந்து விழுந்து கிடப்பது தொடர்பாக அப்பகுதியில் உள்ள மின்வாரிய அதிகாரிகளுக்கு புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் இந்த சோகச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஆர்.ஆர். நகர் பகுதி பொதுமக்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர். மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணைக்கு அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டுள்ளார்.  இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார், இறந்த சிறுமிகளின் பெயர் மகா (9) மற்றும் பாவனா (8) என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. மின்துறை சார்பில் சிறுமிகளின் குடும்பத்திற்கு நிதியுதவியை அமைச்சர் தங்கமணி அறிவித்தார்.

Leave a Response