போலீஸாக மாறும் லிங்கா கதாநாயகி!

linka
லிங்கா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹிந்தி நடிகை சோனாக்சி சின்கா. பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக உள்ள சோனாக்சி ‘அகிரா’ மற்றும் ‘போர்ஸ் 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் அடுத்ததாக ரஞ்சித் திவாரி இயக்கத்தில் நிகில் அத்வானி தயாரிப்பில் உருவாகும் போலீஸ் படத்தில் போலீஸாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதைப் பற்றி தெரிவித்த நிகில் அத்வானி,”படத்தின் ஒன் லைன் ஸ்டோரியை சோனாக்சி சின்காவிடம் கூறினேன். அது அவருக்குப் பிடித்துவிட்டதால் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளார். ஆனால் அவர் உறுதி அளிக்கவில்லை. அவர் சம்மதம் தெரிவித்ததும் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response