மருத்துவத்துறையில் தொடர்ந்து நிகழும் அவலங்கள்: உயிருக்கு போராடிய விவசாயிக்கு ஆம்புலன்ஸ் தரமறுத்த அரசு மருத்துவமனை!

 

Screenshot_2017-10-13-08-10-34-1280x720-678x381

மனைவி பிணத்தை தோளில் சுமந்து சென்ற கணவன் ,பேத்தி உடலை   தோளில் சுமந்து சென்ற  தாத்தா, ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த குழந்தைகள் , டெங்குவிற்கு சிகிச்சையளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாமை என நாள்தோறும் ஏதேனும் விசித்திரம் மருத்துத்துறையில் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
அந்தவகையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாம்புகடித்து உயிருக்கு போராடிய விவசாயிக்கு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் தரமறுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேல்சிகிச்சைக்காக மதுரை செல்ல தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை வாடகைக்கு எடுத்துச் செல்ல மருத்துவ நிர்வாகம் கூறியதா கூறப்படுகிறது. ஆம்புலன்ஸ் தரமறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளனர்.

Leave a Response