பேச்சு, கருத்து சுதந்திரம் இல்லையா? : மெர்சல் பட விவகாரத்தில் சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதி!

hc4-big

மெர்சல் படக் காட்சிகளில் என்ன தவறு உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மெர்சல் படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்ப பெற கோரிய வழக்கில் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

 
விஜய் நடித்துள்ள `மெர்சல்’ திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரியும் அதற்கு வழங்கியுள்ள தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெறக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாள்களுக்கு முன்னர் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், `இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான கருத்துகள் மெர்சல் திரைப்படத்தில் இருக்கின்றன. குறிப்பாக, மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள்குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரான வழக்கறிஞர் அஷ்வத்தாமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 
இதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், இன்று இந்த வழக்கை விசாரனைக்கு வந்தது, அந்த வழக்கை விசாரித்த நீதிபதி .
“மெர்சல் படக் காட்சிகளில் என்ன தவறு உள்ளது ? ஜி.எஸ்.டி. பற்றி தவறான கருத்து இருப்பதாக மனுதாரர் அஸ்வத்தாமன் வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். இது சினிமாதானே ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள் ” என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினவியுள்ளனர்.
“பேச்சு, கருத்து சுதந்திரம் இல்லையா என்றும், உலக அளவில் ஊட்டச்சத்து குறைப்பாட்டில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா? ” என்றும் நீதிபதிகள் சரமாரிக் கேள்வி எழுப்பினர்.

Leave a Response