விவசாயத்தை மத்திய பட்டியலுக்கு மாற்றப்பார்க்கிறதா நிதி ஆயோக்?

 

192701288414981703942130623153niti-aayog_2017_4_30

பொதுப்பட்டியலில் கல்வி இருப்பதால் நீட் தேர்வு போன்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தமிழகத்தில் கண்டனக் குரல்கள் இருந்து வரும் நிலையில், அடுத்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்திருக்கிறது மத்திய அரசின் நிதி ஆயோக்.

‘‘விவசாய விளைபொருட்கள் சந்தைப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. எனவே, விவசாயத் துறையை மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் கொண்டு வர வேண்டும்’’ என நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கூறியுள்ளார்.

இதற்கு தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. விவசாயத்தை மத்திய பட்டியலில்  சேர்த்தால் என்னாகும்? என்ற கேள்வி எழுகிறது.

விவசாயம் என்பது சந்தை படுத்துதல் மட்டும்தானா? அல்லது தமிழக மக்களின் உணவு தேவை முக்கியமா? என்ற வாதம் வைக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழக விவசாயத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

”மத்திய விவசாயத் துறை, இந்தியா முழுமைக்குமான பொதுவான திட்டமிடலை முன் வைக்கிறது. ஆனால், தமிழகத்தின் உணவு தேவை, வாய்ப்புகள், நீர் ஆதாரம், பருவநிலை மாற்றம் போன்றவற்றின் அடிப்படையில், தமிழக விவசாயத்துறை திட்டமிடுகிறது. இதன் மூலமே தமிழகத்தில் விவசாய உற்பத்தியும் தீர்மானிக்கப்படுகிறது.

niti-aayog-comp

இதுமட்டுமின்றி, தமிழக விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கான தேவை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டும், தமிழக விவசாயத் துறை நடவடிக்கை எடுக்கிறது. விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மாநில அரசே தீர்வு காண்கிறது. விளை பொருட்களுக்கான ஆதார விலையைப் பொறுத்தவரையில், மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசும் நிதி அளிக்கிறது.

மத்தியப் பட்டியலுக்கு விவசாயம் சென்றால், இவை அனைத்தும், கிடைக்காமல் போகக்கூடும். இந்திய அளவில் நிர்ணயம் செய்யப்படும் அளவுகோலை வைத்து மட்டுமே தமிழக விவசாயிகள் செயல்பட முடியும். தமிழக அரசின் உதவிகளும் கிடைக்காமல் போகக்கூடும்” என்று அவர்கள் கூறினர்.

stalin__N_06155

விவசாயத்தை மத்திய பட்டியலுக்கு மாற்ற கோரும் நிதி ஆயோக் உறுப்பினர் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

“சமூக நீதிக் கொள்கை மற்றும் கூட்டாட்சி தத்துவத்தில் குறுக்கிடும் வகையில் நிதி ஆயோக் கருத்து தெரிவித்துள்ளது. நிதி ஆயோக் உறுப்பினர்களும், துணை தலைவரும் விபரீதமான கருத்துக்களை கூறி வருவகின்றனர் . விபரீதமான கருத்துக்களை நிதி ஆயோக் உறுப்பினர்கள் கூறுவதை பிரதமர் தடுத்து நிறுத்த வேண்டும்”என்று கூறினார்.

Leave a Response