தொடரும் மரணங்கள்: ஜார்கண்டில் மேலும் ஒரு பட்டினி சாவு!

 

ஜார்கண்ட் மாநிலத்தில் பட்டினியால் ரிக்‌ஷா இழுக்கும் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்காரா என்ற கிராமத்தில் தான் இந்த துயர சம்பவம் நிகழந்துள்ளது. 43 வயதான பைத்யநாத் தாஸ் என்ற தொழிலாளியின் வீட்டில் வறுமை குடிகொண்டதால் சாப்பிட உணவு கிடைக்காத பரிதாப நிலை ஏற்பட்டது. ரேசன் அட்டை இல்லாததால் உணவு பொருட்களை வாங்க முடியாத சூழல் உருவானது. இதனால் பட்டினியால் வாடிய அத்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

வீட்டில் கடந்த 10 முதல் 15 நாட்களாக சாப்பிட உணவேதும் இல்லையென உயிரிழந்த தொழிலாளியின் மகன் கூறியுள்ளார். தனது தந்தை ரிக்‌ஷா இழுத்து சம்பாதித்து வந்ததாகவும், தாய் வீட்டு வேலைகள் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும் போதிய வருமானம் இல்லாததால் கடந்த சில நாட்களாக சாப்பிட கூட வழியில்லாமல் தவித்து வருவதாக குறிப்பிட்டார். பட்டினியால் தொழிலாளி உயிரிழக்கவில்லை என மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது. உடல் நலக்குறைவு காரணமாகவே அவர் மரணித்துள்ளதாக கூறியுள்ளது. உயிரிழந்த தொழிலாளியும், அவரது குட்பத்தினரும் மாதம் ரூ.4,000 வரை சம்பாதித்துள்ளனர். எனவே அவர்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்கவில்லை என கூறப்படுவதில் உண்மை இல்லை.

800x480_341a057bd14a7a408c9d84e7b991e97c

ஜார்கண்டில் பட்டினியால் 11 வயது சிறுமி கடந்த 28-ம் தேதி உயிரிழந்தார். ஆதார் எண்ணை இணைக்கவில்லை என கூறி ரேசன் பொருட்களை தர மறுத்ததால் அச்சிறுமி இறந்தார். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அம்மாநிலத்தில் மீண்டும் ஒரு பட்டினி சாவு அரங்கேறியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response