அடுத்தடுத்து இடியும் அரசு கட்டிடங்கள்- பீதியில் நாகை மயிலாடுதுறை!

buse

நாகை மாவட்டம் பொறையார் பகுதியில் அக்டோபர் 20 ம் தேதி அரசு போக்குவரத்து கழக பணிமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சோகமும் அதிர்ச்சியும் நீங்குவதற்குள், நாகை மாவட்டத்தில் தீயணைப்பு துறை அலுவலக கட்டிடத்தின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது.

இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அடுத்தடுத்த இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அரசு கட்டிடங்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று  ஆய்வு செய்தார்.

os

பின்னர், பழங்கால கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என தெரிவித்தார்.

அடுத்தடுத்து அரசு கட்டிடங்களின் மேற்கூரை இடிந்து விழுந்து வரும் நிலையில் தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் மேற்கூரையும் இடிந்து விழுந்துள்ளது

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவு கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. 6 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கட்டிடத்தின் மேற்கூரை இன்று  அதிகாலை இடிந்து விழுந்து.

bil

குழந்தைகள், பெண்கள் யாரும் மருத்துவமனையில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

 

Leave a Response