பாஜகாவை ஒன்றும் சொல்லாமல் மெர்சலை பாராட்டிய சூப்பர்ஸ்டார்!

Merasal

மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன. ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளதால் பாஜகவினர் கடுமையாக கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதன் உச்சகட்டமாக விஜய் கிறிஸ்தவர் என்பதாலேயே இப்படியெல்லாம் பேசுகிறார் எனவும் விமர்சித்து வருகிறார் பாஜக்வின் எச். ராஜா. அதேநேரத்தில் நடிகர் விஜய்க்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

vijyaka

இந்நிலையில் நேற்று மெர்சல் திரைப்படத்தை இயக்குநர் அட்லி, நடிகர் விஜய்யுடன் நடிகர் கமல்ஹாசன் பார்த்து பாராட்டினார்.

 

 

super1

அதேநேரத்தில் திடீரென ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், மெர்சல் படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்; அத்துடன் மிக முக்கியமான பிரச்சனையை அலசியுள்ளதாகவும் கூறிப்பிட்டிருந்தார் ரஜினிகாந்த்.

Mersal-Rajini5

அதேநேரத்தில் பாஜகவின் எதிர்ப்பு தொடர்பாக ரஜினிகாந்த் எந்த ஒரு கருத்தும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. முக்கியமான பிரச்சனையை அலசியுள்ளதாக பாராட்டியதே பாஜகவுக்கு எதிர்ப்பு என வைத்துக் கொள்ளலாம் என ரஜினி ரசிகர்கள் கூறுகின்றனர்.

Leave a Response