திரைப்படத்தில் தவறான கருத்துகள் வந்தால் நீக்க கேரிக்கை வைப்போம்- தமிழிசை

Tamilisai-Soundararajan (1)

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் ‘மெர்சல்’ விவகாரம் தொடர்பாக கேட்டபோது அவர் இதைத் தெரிவித்தார்.

நடிகர் விஜய்யை வளைத்து போட்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

அவர் மேலும் கூறும்போது,

Merasal

‘ ஜிஎஸ்டி என்பது மதிப்புக்கூட்டுவரி அல்ல; மதிப்பு குறைப்பு நடவடிக்கை. ஜிஎஸ்டி குறித்து மக்களுக்குத் தவறான தகவல்கள் தருவதை காங்கிரஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தவறான கருத்துகள் எந்த திரைப்படத்தில் வந்தாலும் நீக்குவதற்கு கோரிக்கை வைப்போம். காங்கிரஸ் ஆட்சியில், அவசர நிலை குறித்த படம் வந்தபோது, முடக்கப்பட்டடது.

நல்ல திட்டங்களை கொண்டு வரும்போது விமர்சனங்களைக் கண்டு அஞ்சப்போவதில்லை.

h-raja

ஹெச். ராஜா குறித்து தனது ட்விட்டரில் விஷால்கருத்து தெரிவித்ததை நான் பார்க்கவில்லை.

கரூரில் நடைபெறும் பொதுக்குழுவில் இன்றைய அரசியல் சூழல், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பற்றி ஆலோசிக்கப்படும்’ என்றார்.

Leave a Response