‘மெர்சல்’ ரிலீஸில் சிக்கல்; பின்னணியில் நடந்தது என்ன?

8762-mersal114364932

 

‘மெர்சல்’ திரைப்பட வெளியீட்டு விவகாரப் பிரச்சனை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ‘மெர்சல்’ படத்துக்கான டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் படம் வெளியாகுமா? என்ற குழப்பம் நீடித்துகொண்டே உள்ளது.

 

பல கட்டப் பிரச்சனைகள்!

விஜய் படம் என்றாலே பலகட்ட பிரச்சனைகளை கடந்து கடைசி நேரத்தில் வெளியாவதும், சில நேரங்களில் தாமதமாக வெளியாவதும் வாடிக்கையாகவே உள்ளது.

இந்நிலையில் தற்போது விஜய் நடிப்பில், அட்லீ  இயக்கத்தில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள ‘மெர்சல்’ படத்தின் வெளியீட்டிற்கும் பிரச்சனை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

முதலில் படம் தீபாவளிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டு டீசர் வெளியிட்டவுடனேயே படத்தின் தலைப்புக்கு எதிராக வழக்குத்தொடரப்பட்டது. பின்னர் கடந்த அக்டோபர் 6-ந்தேதி இந்த தலைப்பை பயன்படுத்த தடையில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கேளிக்கை வரி பிரச்சனை, தியேட்டர் உரிமையாளர்கள் பிரச்சனை என எல்லாம் ஒருவழியாக முடிந்த போதும் தற்போது புதிதாக முளைத்திருப்பதோ விலங்குகள் நலவாரிய பிரச்சனை!

1506191423c

உண்மையில் நடப்பது என்ன?

மெர்சல் பட விவகாரத்தில் விலங்குகள் நல வாரியம் புதிதாக  எந்த பிரச்சனையும் கிளப்பவில்லை என்றும் இந்தப் பிரச்சனை ஏற்கனவே இருந்ததுதான் என்றும் அதை முறையாக கவனிக்காமல் விட்டதால் தான் பிரச்சனை தற்போது விஸ்பரூபம் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

யார் இந்த கீதா ராஜன் ?

மெர்சல் படத்தை தணிக்கைக்குழுவுக்கு திரையிட்டபோது விலங்குகள் நலவாரியம் சார்பாக கீதாராஜன் என்பவருக்கும் இந்த படம் திரையிடப்பட்டதாம். அதில் திரையிடப்படக்கூடாத விலங்களின் பட்டியலில் உள்ள ஒரு பாம்பு வகை படத்தில் உபயோகித்து இருப்பதாகவும், படத்தில் இடம்பெற்றுள்ள புறாவை கிராபிக்ஸ் என குறிப்பிடாதது குறித்தும் கீதா ராஜன் கேள்வியெழுப்பியுள்ளார். அவருக்கு மெர்சல் படக்குழு முறையாக பதிலளிக்காததாகவும் , சரியான பொறுப்போடு  நடந்துக்கொள்ளாததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தான் விலங்குகள் நலவாரியம் தடையில்லா சான்றிதழ் தர மறுப்பதாகவும் , இதற்கு பின்னணியில் அந்த கீதாராஜன் தான் காரணமாக உள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

pic

டெல்லி வரை சென்ற விஷால்!

நடிகர் சங்க பொதுச்செயலாளரும் , தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர்  விஷால் விலங்கு நலவாரியத்தில் உறுப்பினராக இருப்பதால் தமிழ்நாடு, டெல்லியில் உள்ள விலங்குகள் நலவாரியத்திலும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ,அவர்கள் விஷாலுக்கு சரியாக பதிலளிக்காத்தாகவும்,  இருந்தபோதும் விஷால் படத்தை வெளியிடுவதற்குத் தேவையான பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

முதல்வரைச் சந்தித்த விஜய்..!

இந்த நிலையில் தான் நேற்று  திடீரென முதலமைச்சரை சந்தித்த விஜய் இது குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். தடையில்லா சான்று தருவதில் உள்ள  சிக்கல்  குறித்தும் பேசியுள்ளார்.

இந்த நிலையில் முதலமைச்சர் பிறப்பித்த மறைமுக உத்தரவின் பேரிலேயே ’மெர்சல்’ படத்திற்கு அனுமதி வழங்குவதற்காக ஆலோசிக்க, சென்னை திருவான்மியூரில் விலங்குகள் நல வாரிய சிறப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்று வருகிறது. மெர்சல் படத்திற்கு தடையில்லாச் சான்று வழங்குவது தொடர்பாக அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. அநேகமாக இன்று பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Response