ரெயில்வே உணவை சாப்பிட்ட 26 பயணிகளுக்கு உடல்நலம் பாதிப்பு: தீவிர சிகிச்சை பிரிவில் 3 பேர் அனுமதி!

1475817725-7595

கோவாவில் இருந்து மும்பைக்கு தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்ற 26 பயணிகள் ரெயில்வேக்கு சொந்தமான உணவு வாங்கி சாப்பிட்டதில் வாந்தி – மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவாவில் இருந்து மும்பைக்கு தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. இந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகளில் சிலர் ரெயில்வேக்கு சொந்தமான உணவை வாங்கி சாப்பிட்டனர்.

காலை உணவை வாங்கி சாப்பிட்ட சிலருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. அவர்கள் சாப்பிட்ட உணவில் வி‌ஷத்தன்மை ஏற்பட்டதால் 26 பயணிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த உடன் அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்ட 26 பயணிகளும் மும்பையில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிபுலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த 26 பேரில் 6 வயது சிறுவனும் அடங்கும். 3 பேர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ரெயிலில் உள்ள பயணிகள் அனைவரும் பீதி அடைந்தனர். தொங்கன் ரெயில்வே துறை இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியன் ரெயில்வே கேட்ரிங் மற்றும் சுற்றுலா கழகத்தை சேர்ந்த 2 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரியை எடுத்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது

Leave a Response