டெங்கு ஒழிப்புப் பணிக்காக மத்திய அரசு குழுவிடம் ரூ.256 கோடி நிதி ஒதுக்க வலியுறுத்தல்!

டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு சென்னை வந்தது. 5 பேர் கொண்ட மத்திய குழுவினர் தமிழக சுகாதார அதிகாரிகளுடன் இன்று ஆய்வு நடத்தினார்கள். டெங்கு ஒழிப்புப் பணிக்காக மத்திய அரசு குழுவிடம் ரூ.256 கோடி தமிழக அரசு கோரியுள்ளது!

Vijay_1_12354_20285

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் உயிர் இழந்துள்ளனர்.

டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டெங்குவை ஏற்படுத்தும் ஏ.டிஸ் கொசுக்களை அழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசு உற்பத்தியாகும் பகுதிகளை கண்டறிந்து சுகாதாரத்துறை ஊழியர்கள் கொசு மருந்து அடித்து வருகிறார்கள். மேலும் டெங்கு கொசு பரவுவதற்கு காரணமாக உள்ள கடை மற்றும் நிறுவனங்கள், காலி மனை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

கழிவுப் பொருட்களை அகற்றாதவர்கள் மீது அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு சென்னை வந்தது. 5 பேர் கொண்ட இந்த குழுவில் அசுத்தோஸ் பிஸ்வால் (எய்ம்ஸ் மருத்துவமனை), சுவாதி துப்ஸிஸ் (டெல்லி குழந்தைகள் நல மருத்துவர்), கவு‌ஷல் குமார், கல்பனா பருவா, வினய் கார்கி (பூச்சி மூலம் பரவும் நோய் கட்டுப்பாட்டு மையம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மத்திய குழுவினர் தமிழக சுகாதார அதிகாரிகளுடன் இன்று ஆய்வு நடத்தினார்கள். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதா கிருஷ்ணன், மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன், சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தை சாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். காலை 10.15 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மத்திய நிபுணர் குழுவினர் டெங்கு பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.
201710131104397997_Central-Committee-study-about-Dengue-fever-in-Chennai_SECVPF
எந்தெந்த பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. உயிரிழப்பு குறித்த விவரங்களையும், கேட்டறிந்தனர். தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை டெங்கு காய்ச்சலின் பாதிப்பு எப்படி இருந்தது என்பது பற்றியும் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

இதைத் தொடர்ந்து மத்திய நிபுணர் குழுவினர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையை பார்க்க விரும்பினார்கள். முதலில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கும் அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும் சென்று நோயாளிகளை பார்க்க உள்ளனர்.

பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவிடம், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய அரசு குழுவிடம் ரூ.256 கோடி தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

Leave a Response