தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்!- ஆளுநர் பன்வாரிலால் பேட்டி.

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்து கொண்டு பன்வாரிலால் புரோகித்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

banwarilal-purohit-122-06-1507268103

பதவியேற்புக்கு பின் ஆளுநர் பன்வாரிலால் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதே என்னுடைய முதல் கடமை. இரண்டாவதாக எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அது சிறியதாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் அதில் எந்த அரசியல் தலையீடும் இருக்காது. அனைத்து முடிவுகளும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டே இருக்கும்”.

“தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு ஏற்ப நான் என்னுடைய ஆதரவை அளிப்பேன். தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதல்வர், அமைச்சர்களுடன் நல்ல நட்பு பாராட்டுவேன், தமிழகத்திற்கு கூடுதல் நிதி கொண்டு வர முயற்சிகளை மேற்கொள்வேன்”.

“என்னுடைய தலைமையின் கீழ் செயல்பாடுகளில் நிச்சயம் வெளிப்படைத் தன்மை இருக்கும். தமிழகத்திலுள்ள சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.”என்றார்.

ஆளுநர், பொறுப்பு ஆளுநர் என்று 28 பேர் தமிழக ஆளுநர்களாக இருந்துள்ளனர். தற்போது தமிழகத்தின் 29-வது ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Response