‘அபியும் அனுவும்’ கிளிஷேவான காதல் கதையாக இருக்காது! – இயக்குநர் B. R விஜயலக்ஷ்மி

 

தமிழ்சினிமா ரசிகர்களுக்கே இன்னும் ஏதேனும் காதல் கதைகள் எடுக்கப்படாமல் இருக்குமோ என்ற சந்தேகம் வருமளவிற்கு காதல் கதைகளால் நிரம்பி வழிகிறது சினிமா உலகம். வாரம் இரண்டு காதல் கதைகள் வெள்ளிக்கிழமைகள் தோறும் வெளிவந்தவண்ணம் உள்ளது. அப்படியிருக்கையில் ஒரே மாதிரியான கிளிஷேவான  காதல் கதையாக தன் படம் இருக்காது என நம்பிக்கை தெறிக்கப்பேசுகிறார் ‘அபியும் அனுவும்’ பட இயக்குநர் B. R விஜயலக்ஷ்மி.

Abiyum anuvum 1

B.R விஜயலக்ஷ்மி இயக்கத்தில் பியா பாஜ்பாய் மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அபியும் அனுவும்’ படம் குறித்து இயக்குநர்  பேசுகையில்,

” இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் காதல் கதை பொதுவாக யாரும் கையாள யோசிக்கும், பார்த்து  பார்த்து  கையாள வேண்டிய கதையாகும். லத்தீன் , அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த கதை பிண்ணப்பட்டது.  வெவ்வேறு ஊர்களில்  வசிக்கும் காதலர்கள் சந்திக்கும் சவால்கள், இந்த காலத்து காதலில் சமூக ஊடகங்களின் பங்கு ஆகிய விஷயங்களையும்  இப்படத்தில் அழகாக சொல்லப்பட்டுள்ளது. தனது வாழ்நாளில் மிக சிறந்த நடிப்பினை இந்த படத்தில் பியா பாஜ்பாய் தந்துள்ளார். படத்தின் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியிலும் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். சிலர் நினைப்பது போல் ‘அபியும் அனுவும்’ கதை புற்றுநோயை பற்றியதல்ல. இக்கதைக்கு புற்றுநோய்க்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தனக்கு தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் கதாநாயகன் டோவினோ தாமஸ். இவர் போன்ற ஒரு திறமைசாலியை தமிழ் சினிமாவிற்கு  ‘அபியும் அனுவும் ‘ மூலம்  அறிமுகம் செய்வதில் எனக்கு பெருமை ” என்றார்.

Abiyum anuvum2

இப்படத்தில் சுஹாசினி, பிரபு, ரோகினி மற்றும் மனோ பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ‘யோட்லி பிலிம்ஸ்’(Yoodlee Films) தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Leave a Response