மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஜாமின் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்!

 

DILEEP

மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு தொடர்ந்து பெயில் மறுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது கேரள உயர் நீதிமன்றம்.

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நடிகை பாவனாவை கொச்சி அருகே ஒரு கும்பல் கடத்தியது. அவரை சுமார் 4 மணி நேரம் பாலியல் ரீதியாக துன்புறுத்திய அந்த கும்பல் அதனை வீடியோவில் பதிவு செய்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனில், பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின் அந்தோனி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட பல்சர் சுனில் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் ரூ.50 லட்சத்துக்காக பாவனாவை கடத்தியதாக தெரிவித்திருந்தார்.

இந்தத் கடத்தல் சம்பவத்தின் திருப்புமுனையாக கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் நடிகை பாவனா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை திரும்பியது. இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரனணையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

நடிகை பாவனா விவகாரத்தில் சிக்கி கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலிப்புக்கு அலுவா சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததையடுத்து அவர் கேரள உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

ஜாமீன் மறுக்கப்பட்டதால் அலுவா சப் ஜெயிலில் ஜூலை 25-ம் தேதி வரை திலிப் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஜூலை 15-ம் தேதியன்று ஜாமீன் மனு கோரப்பட்டதன் மீது நடந்த விசாரணையில் திலிப் செல்வாக்கு மிக்கவர் இந்நிலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்று அலுவா சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்தது.

இந்நிலையில் ஜூலை 17-ம் தேதி இவர் கேரள உயர் நீதிமன்றத்தை ஜாமீன் கேட்டு நாடியிருந்தார். அங்கும் அவருக்கும் தொடர்ந்து பெயில் மறுக்கப்பட்டு வந்ததது.

இந்நிலையில் மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு  இன்று ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது கேரள உயர் நீதிமன்றம்.

 

Leave a Response