பெங்களூரு முழுவதும் திறக்கப்படுகிறது இந்திரா கேண்டீன்கள்!

rahul-gandhi4

வருகிற அக்டோபர் 2-ம் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டு காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா சார்பாக பெங்களூரின் 97-வார்டுகளிலும் இந்திரா கேண்டீங்கள் திறக்கப்படுவதற்கான பணிகள் துரிதமான முறையில் நடைபெற்று வருகின்றன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் துவங்கிவைக்கப்பட்ட அம்மா உணவகங்ளை முன்மாதிரியாக கொண்டு பெங்களூரில் 198- இந்திரா கேண்டீங்கள் அமைப்பதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா 2017-2018 நிதி நிலையறிக்கையில் 100-கோடியை இதற்காக ஒதுக்கீடு செய்திருந்தார்.
அதன்படி ஆகஸ்ட் 15-ந்தேதி பெங்களூர் நகரின் முதல் இந்திரா கேண்டீனை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி துவங்கிவைத்தார்.

rahul-22
முதலில் ‘நம்ம கேண்டீன்’ என பெயரிடப்பட்டிருந்த உணவகங்களுக்குப்பின்னர் இந்திரா கேண்டின் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நகர்முழுவதும் 97-இந்திரா கேண்டீங்கள் திறக்கப்படுவதற்காக தயார் நிலையில் உள்ளதாகவும் அதற்கான உணவுதயாரிக்கும் இடங்கள் நகர்முழுவதும் மொத்தம் 27-அமைப்பதற்காக திட்டமிடப்பட்டு அதில் 14-தயார் நிலையில் உள்ளதாகவும், ஏற்கனவே 6-உணவு தயாரிக்கும் இடங்கள் செயல்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காலை உணவு 5-ரூபாய்க்கும் மதிய உணவு 10-ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே கர்நாடக அதிகாரிகள் தமிழகம் வந்து அம்மா உணவகங்களை ஆய்வு நடத்தி சென்றிருந்தனர்,அம்மா உணவகங்களை முன்மாதிரியாக கொண்டே இந்திரா கேண்டீண்கள் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது

Leave a Response