நீட் தேர்வு தேவைதான்! -ஆதி திராவிட ஆணையம் கருத்து!

neet2

மருத்துவ படிப்பில் சேர நீட் என்ற தேர்வு முறையை மத்திய அரசு கொண்டுவந்தது.

இது தமிழகத்திற்கு தேவை இல்லை என கூறி பல்வேறு கட்ட போராட்டங்களையும் தாண்டி நீட் தமிழகத்தில் கால் பதித்தது.நீட்டில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஆனால் கடைசி வரை விலக்கு கிடைக்கவில்லை.

Anitha-3

இதனால் நீட்டில் குறைந்த மதிப்பெண்களும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களும் பெற்ற அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தமிழகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆதி திராவிட ஆணைய துணை தலைவர் முருகன், மாணவி அனிதா மரணத்தின் பின்னணியில் அவரது குடும்பத்தார் இருப்பதற்காண வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் சமூக அளவிலேயே வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

காரணம், மெடிக்கல் மட்டுமல்லாமல் மற்ற படிப்புகளுக்கும் அனிதா வின்னப்பித்திருந்திருக்கிறார் எனவும் அனிதாவின் பெற்றோர் மற்றும் சகோதரரிடமும் விசாரணை நடத்தப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

அகில இந்திய அளவில் போட்டியை சமாளிக்க நீட் தேவை எனவும் மாணவி அனிதாவின் மரணம் குறித்த விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

விசாரணை நடைபெற்று வருவதாகவும் இன்னும் முழு அறிக்கை எங்களுக்கு வரவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Leave a Response