Prabhu Deva to act in India’s First 3D Film on Dance:


பிரபுதேவா நடிக்கும் இந்தியாவின் முதல் டான்ஸ் 3-D திரைப்படம்:

விஷ்ணு (பிரபுதேவா) இந்தியாவின் மிகச்சிறந்த நடனக் கலைஞர். அவரை பொருத்தவரை நடனம் என்பது அவரது உயிருக்கு இணையானது. அதுதான் அவரது வாழ்க்கை.

எனவே தனது நண்பருடன் இணைந்து மும்பையில் சுவிஸ் டான்ஸ் அகாடமி என்ற பெயரில் நடன பயிற்சி பள்ளியை நடத்துகிறார். ஏதோ ஒரு பிரச்சினையால் திடீரென சுவிஸ் டான்ஸ் அகாடமியில் இருந்து வெளியேற்றப்படுகிறார். இதனால் மனமுடையும் விஷ்ணு நடனத்தை கைவிட்டுவிட்டு, நிரந்தரமாக மும்பையை விட்டு வெளியேற முடிவு செய்கிறார்.

விஷ்ணு கிளம்புவதற்கு முந்தைய நாள் இரவு, ஒரு இடத்தில் நடனக் குழுவொன்று, நடனப் போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பயிற்சி செய்து கொண்டிருப்பதை பார்க்கிறார்.அந்த குழுவின் திறமை விஷ்ணு ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பதற்கு உதவுகிறது. அவர் அந்த குழுவை தன் கட்டுபாட்டில் கொண்டுவருகிறார்.அவர் அந்த குழுவுக்கு உதவுவதோடு, அவர்களின் பிரச்சினைகளை சரி செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து,இந்தியாவின் மிகசிறந்த நடனக்குழுவாக அதைமாற்றுகிறார்……………..
விஷ்ணு கதாபாத்திரத்தில்,புதிய பரிணாமத்தில் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனப்படும் பிரபுதேவா நடிக்கிறார். இவருடன் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, டான்ஸ் இந்தியா டான்ஸ் நடனப் போட்டியில் வென்ற சல்மான் கான், தர்மேஷ், பிரின்ஸ், மயூரேஷ்,விருஷாலி மற்றும் உலகப்புகழ்பெற்ற so you think you can dance நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற லாரன் கோட்லியப்-ம் நடிக்கிறார்கள்.

பிரபல நடன இயக்குனர் ரெமோ டி’சோசாவின்இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய படத்தயாரிப்பு நிறுவனமான யு.டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும்இந்தியாவின் முதல் 3-D நடனப்படம் “ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்”.முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை நிரூபிக்கும் படமாக இது அமையும்………….

கீழே குறிபிட்டுள்ள தொழில்நுட்பக்கலைஞர்கள் ஒபந்தம் செய்யப்பட்டுள்ளனர்:

கதை,இயக்கம் மற்றும் நடனம்: ரெமோ டி’சோசா
இசை : சச்சின்,ஜிகார்
ஒளிப்பதிவு : விஜய் குமார் அரோரா
படத்தொகுப்பு : மனன் சாகர்
கலை : அபர்ணா ஸத்
திரைக்கதை : துஷார் ஹிரானந்தனி
வசனம் : அமித் ஆர்யன்
கூடுதல் வசனம்
மற்றும் பாடல்கள் : மயூர் பூரி

ஒலியமைப்பு : சஞ்சய் மௌர்யா,ஆல்வின் ரெகோ
உடைகள் வடிவமைப்பு : தீப்தி ஹாட்ரெ,மொய்ஸ் கப்பாடியா
தயாரிப்பு : ரோனி ஸ்குரூவாலா, சித்தார்த் ராய் கபூர்
மக்கள் தொடர்ப்பு : சி.என்.குமார்