புதுசா ஒரு ஒன்லைன்! ‘காதல் கசக்குதய்யா’ சினிமா விமர்சனம்!

kaadhal 2

அவனைப் பார்த்ததும் பிடிக்கிறது அவளுக்கு. இருவருக்கும் கிட்டத்தட்ட பத்து வயது வித்தியாசம். அவன் நல்ல வேலையில் இருக்கிறான். அவள் பிளஸ் டூ மாணவி. காதலுக்கு வயசாவுது படிப்பாவுது என அவளது காதலை ஏற்க முடியவில்லை அவனால். காரணம் அவன் நல்ல உயரம். இவள் குள்ளம்.

வயது வித்தியாசத்தோடு உயரத்தையும் காரணம் காட்டி ‘நமக்குள் ஒத்து வராது’ என ஒதுங்குகிறான் அவன். இவள் விடுவதாயில்லை!

இவர்களுக்குள் கசந்த காதல் பின்னர் எப்படி இனித்தது என்பதை காமெடியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் துவாரக் ராஜா.

துருவா ஜம்மென்றிருக்கிறார். இயல்பாய் வருகிறார், இயல்பாய் சிரிக்கிறார் அவ்வளவே. கேரக்டருக்கு அதுவே போதுமானதாயிருக்கிறது!

வெண்பா கியூட்டான பெண்பா! சின்னச் சின்ன குறும்புகளால் காதல் மொழி பேசுவதும் மனதுக்குப் பிடித்தவனைக் கவர எக்குத் தப்பாய் ஏதேதோ செய்வதுமாய் கதாபாத்திரத்தில் நிறைகிறார்!

துருவாவின் அம்மா கல்பனா கோமாவில் கிடப்பதும் பின் மீண்டு வருவதுமாய் கதைக்குள் கதையொன்று வந்து விழிகளில் சற்றே ஈரங்கசியச் செய்து போகிறது!

படம் பார்ப்பவர்களுக்கு டிபி வந்துவிடும் அளவுக்கு துருவா காட்சிக்கு காட்சி சிகரெட் பிடிக்கிறார். அப்படி பிடிப்பது தவறு என மெசேஜ் சொல்வது தனிக்கதை!

புதிதாக ஒரு ஒன்லைன் பிடித்த இயக்குநர் காமெடியை வைத்து மட்டுமே ஒப்பேற்றப் பார்க்காமல் திரைக்கதையில் சற்றே கவனம் செலுத்தியிருந்தால் காதல் அதிகம் இனித்திருக்கும்!

Leave a Response