நீட் தேர்வு மூலம் எழைகளுக்கு சேவை செய்யும் டாக்டர்களை உருவாக்க முடியாது! -திரி கொளுத்திப் போட்டது வேலூர் சிஎம்சி மருத்துவமனை

vellore-cmc
மருத்துவ படிப்பில் சேர நீட் என்ற முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியது. பல்வேறு கட்ட எதிர்ப்புகளையும் மீறி மத்தியஅரசு நீட் தேர்வை நடத்தி முடித்தது.

இதையடுத்தும் தமிழக அரசும் மத்திய அரசும் நீட்டில் இருந்து விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையை தமிழக மாணவர்கள் மத்தியில் உருவாக்கினர்.

இந்நிலையில் நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு தமிழகத்திற்கு விலக்கு கிடையாது என தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் எனக் கூறிவந்த தமிழக அரசு கையை விரித்தது.

இதனால் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்ற அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போனது. இதையடுத்து அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு நியாயம் கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் இளைஞர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் தங்கி, ஏழைகளுக்கு சேவை செய்யும் உணர்வும் பண்பும் கொண்ட மருத்துவர்களை உருவாக்குவதற்காகவே மருத்துவக் கல்லூரி நடத்தி வருகிறோம் எனவும் நீட் மூலம் அத்தகைய மாணவர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது என்று கூறி, 100 எம்பிபிஎஸ் இடங்களையும் 60 உயர் சிறப்பு மருத்துவ இடங்களையும் நீட் அடிப்படையில் நிரப்ப மறுத்து, தனது தியாகத்தின் மூலம் வலிமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறது சி.எம்.சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.

Leave a Response