எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேறக்கும் முரசொலி பவள விழா!

murasoli_page

முரசொலியின் 75-வது ஆண்டு நிறைவு பவள விழா கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. கடந்த மாதம் 11-ந் தேதியன்று நந்தனத்தில் நடைபெற்ற விழாவின் போது மழை குறுக்கிட்டதால் செப்டம்பர் 5-ந் தேதி மாலை சுமார் 5 மணிக்கு முரசொலி பவளவிழாப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த பொதுக்கூட்டம் இன்று சென்னை கொட்டிவாக்கம் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது. அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

vaiko

கடந்த சில ஆண்டுகளாக திமுகவை வைகோ கடுமையாக எதிர்த்து வந்தார். காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை பார்க்க சென்ற வைகோவுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அண்மையில் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் சென்று பார்த்து வைகோ நலம் விசாரித்தார்.

அப்போது செப்டம்பர் 5-ந் தேதி நடைபெறும் முரசொலி பவள விழாவில் தாம் பங்கேற்க உள்ளதாக வைகோவும் தெரிவித்தார். அதேபோல் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்திருந்தார்.

murasoli

இதனிடையே பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை ஸ்டாலின் நேற்று சென்று பார்வையிட்டார்.

Leave a Response