ஜல்லிக்கட்டுக்காக போராடிய சிறுமி விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு!

baby

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பங்கேற்ற 4 வயது குழந்தை பிலிண்டா. அவரை எண்ணி தற்போது தாயார் ரமலா கதறிக் கொண்டிருக்கிறார். ரமலாவின் கண்ணீருக்கும் இழப்புக்கும் ‌ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. திருவான்மியூரில் உள்ள தோழியை‌ பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது மகள் பிலிண்டாவுடன் ரமலா வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த குழந்தை பிலிண்டா மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தாள்.

அமெரிக்காவில் உள்ள தந்தை உடனடியாக ஊர் திரும்ப முடியாத நிலையில், குழந்தை பிலிண்டாவின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விபத்து குறித்து போக்குவரத்து கூடுதல் ஆணையர் பெரியய்யா, இணை ஆணையர் அன்பு ஆகியோர் சம்ப‌வ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். விபத்து குறித்தும், அங்கிருந்த போக்குவரத்துத் துறையினரின் சிசிடிவி கேமரா வேலை செய்யாதது
பற்றியும் இவர்கள் விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமராக்கள் வைக்க சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் போக்குவரத்துத் துறையினர், நகரின் முக்கியப்பகுதியான அடையாறு – மத்திய கைலாஷ், டைடல் பார்க் சிக்னல் அருகில் வைத்த சிசிடிவி வேலை செய்யவில்லை என்பது கேள்வியை எழுப்பியுள்ளது.

Leave a Response