ஆதரவை வலுப்படுத்த இரண்டாவது நாளாக அமைச்சர்களுடன் முதல்வர் சந்திப்பு!

edappadi
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்ததை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். இதையடுத்து அந்த 19 எம்எல்ஏக்களும் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் 10 நாட்கள் ஆகியும் இப்பிரச்சனை குறித்து கவர்னர் வித்யாசாகர் ராவ் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், டி.டி.வி.தினகரன், தனது ஆதரவு எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு விரைவில் குடியரசு தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று தலைமை செயலகம் வரவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார். நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சி மாவட்ட எம்எல்ஏக்கள் பங்குபெற்றனர். மேலும் அமைச்சர்கள் சிவிசண்முகம், காமராஜ், வெல்லமணி நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

இன்று இரண்டாவது நாளாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், தங்கமணி, சரோஜா உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், நாமக்கல், திருப்பூர், சேலம், கிருண்கிரி எம்.எல்.ஏ.க்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Leave a Response