எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி… ‘குரங்கு பொம்மை’ சினிமா விமர்சனம்

kp22
டைரக்டர் மிஸ்டர் நித்திலன், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் ஒருவன் அதற்காக கொலை செய்கிறான். அவனை கதையின் நாயகன் எதுமாதிரியும் இல்லாமல் புதுமாதிரியாக பழி வாங்குகிறான். இதுதான் உங்கள் கதையின் ஒன்லைன். அடடா, இந்த ஒன்லைனை வைத்துக் கொண்டு ஸ்கிரீன்பிளேயில் என்னமாய் விளையாடியிருக்கிறீர்கள்! வெல்டன் நித்திலன்!!

மிஸ்டர் விதார்த், ‘நாம் நடித்த படத்துக்கு வருபவர்கள் படம் பார்த்துவிட்டு திருப்தியாக போக வேண்டும்’ என்ற கொள்கை வைத்திருப்பது எங்களுக்குத் தெரியும். அந்த கொள்கையை இதிலும் கடைப்பிடித்திருக்கிறீர்கள். எக்காரணம் கொண்டும் கொள்கையைத் தளர விடாதீர்கள். தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழ்நாடு!

kp3

ஹீரோயின் மிஸ் டெல்னா, ‘ஆக்கம்’ படத்தில் ஹீரோயினாக நடித்த பெண் தானே நீ? படம் முழுக்க உனக்கு ஒன்றிரண்டு காஸ்ட்யூம்தான். ஆனாலும் கொள்ளை அழகாக இருக்கிறாய். ஏன் தெரியுமா? மான் மருள்வது போன்ற உன் கண்களும் அந்த வெள்ளந்திச் சிரிப்பும்தான்! முகபாவங்களில் வெரைட்டியைக் கொண்டு வா, பெரிய எதிர்காலமிருக்கிறது!

kp 1

இயக்குநர் இமயம் பாரதிராஜா, பி.எல். தேனப்பன், பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, கஞ்சா கருப்பு, கோடியில் தூங்க ஆசைப்படும் கேடியாக வருகிற கல்கி எல்லாரும் லைன்ல வாங்கய்யா… அத்தனை பேரும் அழகா நடிச்சிருக்கீங்களே… உங்களையெல்லாம் தனித்தனியா பாராட்டணும்யா!

மிஸ்டர் குமரவேல், உங்களைப் பார்த்து இந்த படத்தோட டைரக்டர் ‘நீங்கதான் வில்லனா பண்றீங்க’னு சொன்னப்போ சிரிச்சீங்கதானே? கண்டிப்பா சிரிச்சிருப்பீங்க. இப்படியொரு நடிப்பைக் கொடுப்போம்னு நீங்களே நினைச்சுப் பார்த்திருக்க மாட்டீங்க. கொடுத்துட்டீங்க!

மிஸ்டர் எடிட்டர் சார், கையைக் கொடுங்கள். நிரம்பிய அணைக்கட்டைத் திறந்தால் சீறிப்பாயும் தண்ணீரின் வேகத்துக்கு நிகராக காட்சிகளை செதுக்கியிருக்கிறீர்கள்!

மிஸ்டர் மியூஸிக் டைரக்டர், உங்க ஆர்.ஆர் பக்கா!

டைரக்டர் சார் என்ன கேட்டீங்க. ‘ஷொட்டு மட்டும்தானா? கொட்டு இல்லையா?’னுதானே கேட்குறீங்க. அங்கங்க இருக்குதான். எதுவுமே ரொம்ப படுத்தலை. அதனால அது பத்தி சொல்லலை. அடுத்த படத்தை இதைவிட பெஸ்டா கொடுங்க!

Leave a Response