உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்றார்!

centre-appoints-dipak-mishra-as-next-chief-justice-of-india-08-1502197885
உச்சநீதிமன்றத்தின் 45-ஆவது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹரின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு, தற்போது மூத்த நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ராவின் பெயரை ஜே.எஸ்.கேஹர் பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து, அடுத்த தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை மத்திய அரசு நியமித்து அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் புதிய தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்ட தீபக் மிஸ்ரா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2018) அக்டோபர் 2ம் தேதி முடிவடையும்.

Leave a Response