நாளை சென்னைக்கு ஆளுநர் வருகை… தமிழக சட்டசபை முடக்கப்படுமா ?

governer
முதல்வர் மீது நம்பிக்கையில்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர். இதன் பின்னர் கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பை கிளம்பினார். இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றியது.

அதேநேரத்தில் தாங்கள் அதிமுகவிலேயே தொடருகிறோம் ஆனால் வேறு ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் தெரிவித்துள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வர உள்ளாதாக கூறப்படுகிறது.

அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் உத்தரவிடலாம் என கூறப்படுகிறது. பெரும்பான்மையை எடப்பாடி பழனிச்சாமி நிரூபிக்காவிட்டால் சட்டசபையை ஆளுநர் முடக்கி வைக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

தற்போதைய நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 115 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் உள்ளது. பெரும்பான்மைக்கு 117 எம்.எல்.ஏக்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response