சில்லறை தட்டுப்பாட்டை குறைக்க புதிய ரூபாய் நோட்டு நாளை வெளியீடு !

resarv
கறுப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு மத்திய அரசு பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதியன்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

இதனை தொடர்ந்து, புதிய 2௦௦௦ மற்றும் 5௦௦ ரூபாய் தாள்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. பின்னர் தற்போது சில்லறை கட்டுப்பாட்டை போக்கும் வகையில் நாளை முதல் புதிய 2௦௦ ரூபாய் தாள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 200 ரூபாய் நோடுகான வெளியீட்டாணையை நேற்று வெளியிட்டது மத்திய அரசு. இதனை தொடர்ந்து நாளை முதல் புதிய 2௦௦ ரூபாய் பயன்பாட்டிற்கு வரவுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
iranooru
200 ருபாய் நோட்டின் சிறப்பம்சம்:-

*ஒரு பக்கம் காந்தி படமும், மற்றொரு பக்கம் சாஞ்சி ஸ்தூபி படமும் உள்ளது .
* இது மஞ்சள் நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

புதிய 200 ரூபாய் தாளை நேரில் பார்ப்பதற்கு மக்கள் அதிக ஆர்வமாக உள்ளனர்.

Leave a Response